விசுவாசத்தை துவக்கி முடிப்பவர்

 

 

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு

விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு

 

தரிசித்து அல்ல விசுவாசித்து

நடப்போமே அனுதினமும்

காண்கிறவைகள் அநித்தியம்

காணாதவை  நித்தியம்    - விசுவாசத்தை

 

விசுவாசத்தாலே நம் முன்னோர்கள்

நற்சாட்சி பெற்றனரே

விசுவாச ஜீவியம் மட்டுமே

நற்சாட்சி ஈந்திடுமே                           - விசுவாசத்தை

 

விசுவாசத்தாலே ஆபிரகாம்

நீதிமானாக்கப்பட்டாரே

விசுவாச ஜீவியம் நம்மையுமே

நீதிமான்களாக்கிடுமே                     - விசுவாசத்தை

 

விசுவாசி வெட்கப்படுவதில்லை

ஆண்டவர் வாக்கிதுவே

விசுவாசியே உன்னை காத்துக்கொள்

கர்த்தர் அருள் புரிவார்                       - விசுவாசத்தை